பாட்டியின் கோபம்
திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டி
தென்னந் துடைப்பத்தை தூக்கிப் பிடித்து
ஆட்டி வந்த பத்துப் பேரைக் கண்டு சினமடைந்தார்
அது ஒரு கட்சியின் சின்னம் என்று தெரியாது.
சிறிது நேரம் சென்ற பின்பு செருப்பைத்
தூக்கிப் பிடித்து ஆட்டிக் கொண்டு வந்தான் ஒருவன்
அடுத்து முறத்தைத் தூக்கி ஆட்டிக்கொண்டு எவனாவது வருவான் எனறு
வீட்டிற்குள் சென்ற பாட்டி கதவை மூடித் தாழிட்டுக் கொண்டார்.
********************