செருப்பின் செம கேள்வி

🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

*செருப்பின் செம கேள்வி*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

மனிதனின்
கால் படாதவரை
நான்
கலங்கமில்லாமல் தான்
இருந்தேன்....!!

மனிதனின் காலிலும்
இத்தனை பாவமா?

நீங்கள்
கவனக்குறைவாக..
சாணியிலும்
சகதியிலும்
சேற்றிலும்
கால் வைத்து விட்டு....
என்னை
கேவலமானது என்று
வெளியே விடுகின்றீர்கள்...!!

நீங்கள் செய்யும்
தவறுகளை
என்மீது போடுவதில்
என்ன நியாயம்.?

என்னை நீங்கள்
கேவலமாக நினைக்கிறீர்கள்..
உங்களிடம்
பலரிடம் இல்லாத.
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற
பண்பாடு கூட
என்னிடம் இருக்கிறது
தெரியுமா உங்களுக்கு...?

தினமும்
பாத்திரம் கழுவுகின்றீர்கள்
துணியை கழுவுகின்றீர்கள்
உடலை கழுவுகின்றீர்கள்
பல்லைக் கழுவுகின்றீர்கள்
என்னையும் கழுவுங்கள்
நானும்
தூய்மையாக இருப்பேன்....!!

உங்கள் சோம்பேறித்தனத்திற்கு
என்னை பலிகடா
ஆக்கலாமா.....?

ஏன் குடையை
வீட்டிற்குள் வைக்கின்றீர்கள்?
என்னை
வெளியே
வைக்கின்றீர்கள் ? என்று
கேட்டால்....
குடை
தலைக்கு மேல் இருக்கிறது
நீ காலில்
இருக்கிறாய் என்று
பதில் சொல்கின்றீர்கள்..
அப்படியானால்
இனிமேல்
என்னையும்
தலைமேல் வைத்துக்
கொண்டு நடங்கள்...
உங்கள் புராணங்கள்
கல் முள்
பாதம் சுடுவதிலிருந்து
உங்கள் பாதத்தை
பாதுகாக்குமா என்று
பார்க்கலாம்....!!

என்னையும்....
என்னைத் தைப்பவனையும்
கேவலம் என்று
சொல்லும் நீங்கள்......!
என்னைப் பயன்படுத்துகின்ற
நீங்கள் மட்டும் எப்படி
உயர்ந்தவர்களாக
இருக்க முடியும்.......?

"செருப்பு இல்லாமல்
ஒரு நாள்
நடந்து பார்
செருப்பின் அருமை
தெரியும்" என்று சொல்லும்
நீங்கள்....
அடுத்தவன் கோபத்தில்
"செருப்பில்
அடித்து விடுவேன்" என்று
சொன்னால்
அவமானப்படுத்தி விட்டான்
என்று ஆக்ரோஷத்தில்
கொந்தளிக்கிறாய்....!
நிறம் மாறுவதில்
பச்சோந்தியும் கூட
உங்களிடம்
தோற்றுத்தான் போகும்.....?

குடையை
நீங்கள் வீட்டிற்குள் வைத்தாலும்
அது
என்றாவது ஒரு நாள் தான்
பயன்படும்....
நீங்கள் என்னை
வெளியே வைத்தாலும்
நான் தான்
தினம் தினம் பயன்படுவேன்
மறந்து விடாதே.....!

*கவிதை ரசிகன் குமரேசன்*

🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (7-Aug-22, 7:09 pm)
Tanglish : seruppin sema kelvi
பார்வை : 30

மேலே