அழகி
உருவக்கேலி கண்டு உடைந்துவிடாதே,
தினமொருமுறை வந்து செல் வானவில்லே..
இங்கே மெல்லிடைகளில் மட்டும் கவிதை உருளுமோ,
பருத்த இடைகளில் கற்பனை கைகூடதோ..
வா நிலவே வா
வர்ணிக்க வார்த்தைகள்
வரிசையில் தவமிருக்க...
வஞ்சமில்லா நெஞ்சமுடைய
கொஞ்சும் கிளியே,
உருவம் உருமாறும்
உயிரே மறவாதே...

