உன் இதயத்தின் ஓரத்தில் நான் வாழ்வேன் 555

***உன் இதயத்தின் ஓரத்தில் நான் வாழ்வேன் 555 ***
என்னுயிரே...
அடைமழை போல
இல்லை என்றாலும்...
சில நேரம் வீசி செல்லும்
தென்றலை போல...
என்னை காணும் போது
நீ உதிர்க்கும் உன் சிரிப்பு...
கோர்த்து வைத்த பாசிமணிகள்
போல உன் பல்வரிசைகள்...
நீ அள்ளி
முடியாத உன் கூந்தலோ...
முன்னும் பின்னும்
உன் கழுத்தை தழுவியபடி...
நீயும் நானும்
சேர்வோமா தெரியவில்லை...
நான் வாழும்வரை
நீ என்னில் வாழ்வாய்...
உன் இதயத்தின் ஓரத்தில்
எங்கோ ஒரு மூலையில்...
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
நான் வந்து செல்வேன்...
உன்
அழகிய நினைவில்...
உன் விழிகளில்
கண்ணீர் வரவைக்க அல்ல...
உன் இதழ்களின் ஓரத்தில்
சிறு புன்னகை பூக்கவே வருவேன்...
நமக்குள் சொல்லாத
காதல் சுகம்தான்...
வாழ்க்கை துணையாக
நீ வருவாய் என்று...
ஒருவழி
பாதையில் நான் இன்று.....
***முதல்பூ.பெ.மணி.....***