என் மகள் மூஞ்சி

வடக்கே வேலையும் குடியிருப்பும்
மகள் பிறந்த போது சாமியாரின் வாழ்த்து
மகளுக்கு 'மூஞ்சி' என்று பெயரிட்டார்
அருமையான அர்த்தமுள்ள பெயர்
அருகில் உள்ளோர் கொஞ்சி மகிழ்ந்தனர்
நான் பெற்ற 'மூஞ்சி'யை வாஞ்சையுடன்.

தாய்வீடு தமிழகத்தின் தலைநகரம்
இங்கு வந்தபோது என் மகள் பெயரை
'மூஞ்சி' என்று சொன்னால் என்னாகும்
என் தாயே சிரிப்பார் என் மூஞ்சிக்கெதிரே.

என்ன பேரைச் சொல்லிச் சமாளிப்பது?
தூய தமிழராய் இந்திப் பெயரை வைத்தோம்
தமிழகத்தில் 'மூஞ்சி' கேலிக்கு ஆளாகுமே!
ஆம் இந்திப் பெயர் என்றால் போதும்
எல்லோரும் "ஸ்வீட் நேம்" என்பார்கள்.

தமிழ்ப் பெயர்கள்தான் தமிழருக்குப் பிடிக்காது
பிறமொழிப் பெயர்களுக்கே மரியாதை அதிக மரியாதை
தாய்மொழிப் பற்றையும் தன்மானத்தையும்
இழப்பதைப் பற்றிக் கவலைப்படாத இனம்!
@@@@@@@@@

Moonji = Auspicious, Blessed. Korean, Indian origin. Feminine name.
*******************
இனிப் பிறக்கும் குழந்தைகளுக்காவது தமிழ்ப் பெயர்களையே சூட்டுங்கள்.

எழுதியவர் : மலர் (8-Aug-22, 5:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

மேலே