முயற்சி

வழி
இதோ!
உந்தன் முன்.

தடைகள்... உண்டு
ஏராளமாய்!
கேலியும், ஏளனமும் உனை -
வாழ்த்தி வரவேற்கும்!!

சோர்வும், களைப்பும்
தம்மோடு
இளைப்பாறச்
சொல்லும்!

உன் -
கவனத்தை
மடை மாற்றம்
செய்ய முயலும்!!

சஞ்சலம் - உன்
கனவிலும்
சல்லாபிக்கும்!!

கட...!

உன்னுள் எழும்
தயக்கத்தை
களை.

கடக்கையில்
வலிக்கும்!
இந்த வலி
மரணிக்க
அல்ல!
வாழ்க்கையின்
யதார்த்தை
புரிய வைக்க!?

கட!

சலனம்...
தோல்வியின்
வெறும்-
இடைச் செருகல் தான்!!

உனக்குள்
நீயே கேள்?
பதிலாய்-
"முயல்"- எனப் பலமுறை
உளமாற
வாய்திறந்து
உறக்கச்
சொல்!!

சலனத்தை
துடை!!

நிமிர்!!

உற்சாகத்தை
உன்னுள்
பதிவிறக்கம்
செய்!!

இலக்கோ
தொட்டு விடும்
தூரம்.

தொட வா-
என்கிறது!
கை நிறைய
பரிசோடு!!!!

எழுதியவர் : (15-Aug-22, 4:54 am)
பார்வை : 35

மேலே