சுதந்திர தின கவிதை

வந்தேமாதரம் வந்தேமாதரம் சொல்லி
பாரத தாயை நாம் வணங்கிடுவோம்!

நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை
சூரியொளியில் பிரகாசிக்க செய்திடுவோம்!

அடிமையை போக்க சுதந்திரம் மலர
சிந்திய ரத்தத்தை மறந்திடலாமோ!

விடுதலைக்காக போராட்டங்கள்
எத்தனை எத்தனையோ!

தூக்கு கயிற்றை முத்தமிட்ட
தியாகிகள் எத்தனை எத்தனையோ!

தியாகிகளின் பெருமையை போற்றியே!
இளைய தலைமுறைக்கு
வேண்டுக்கோள்

வீரம் பிறந்தது நம் மண்ணிலே!
பல வெற்றிகளை நாாமும் வென்றிடுவோம்!

பூமியை விட்டு விண்ணிற்கு சென்று
பல சாதனைகளை நாமும் புரிந்திடுவோம்!

தீபம் போன்றது நம் நாடு
பல தீய சக்திகளை நாமும் அழித்ததிடுவோம்!

அறிவியலை நாமும் கற்றிடுவொம்!
அகிலத்தையும் நாமே ஆண்டிடுவொம்!

நாம் மதம் இனமென்று வேறுபடலாம்
பாரதத்தாய்! மக்கள் என்பதில்
ஒற்றுமை கான்போம்!

பாரதத்தாயின் மண்ணெடுத்து பொன்னக்கும் பல விந்தைகளை
நாமும் செய்திடுவோம்!

அகிலதத்திற்கும் அடித்தளமாய்!
நாமே இருந்திடுவோம்!

வந்தே மாதிரம் வந்தே மாதிரமென்று!
பாரத தாயை வணங்கிடுவோம்!

****துரைராஜ் ஜீவிதா****

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (13-Aug-22, 8:17 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 117

மேலே