தகப்பன்
தகப்பன்
வாங்கிய ஊதிய
தொகையை
பத்திரப்படுத்தி
திருப்பி செலுத்தும்
கடன் தொகைக்கு
கை கூப்பி
தவணை சொல்லி
அவனிடம்
ஏச்சும் பேச்சும்
வாங்கி
வாரிசுகள் கையில்
படிப்பு செலவுக்கு
என்று சொல்லி
கொடுத்து விட்டு
கையால் நீவிய
உடைகளை
போட்டு
ஓரமாய் கிழிந்த
காலணியை
சாமார்த்தியமாய்
மாட்டி
கையில் தூக்கிய
பையுடன்
“டிப் டாப்” ஆக
பணிக்கு கிளம்பினான்