கம்பு சம்பு

உலகத் தமிழர் யாரும்
தங்கள் பிள்ளைகளுக்குச்
சூட்டாத பெயர்கள்
நான் பெற்ற இரட்டையர்க்குச்
சூட்ட பேராவல் கொண்டு
தேடிய பெயர்களே 'கம்பு', 'சம்பு'.

பிறமொழிப் பெயர்களே
தமிழருக்கு இனிக்கும்
நாங்களும் தமிழர் தானே
பல நூற்றாண்டு
மரபை மீறுவது இழுக்கு.

முதலில் பிறந்த குழந்தை 'கம்பு'
தமிழ் சிறுதானியம் அல்ல.
இரண்டாவது பையன் 'சம்பு'
பொருத்தமான பெயர்கள்.

வாழ்த்துங்கள் தமிழர்களே
'கம்பு'ம் 'சம்பு'ம் "ஸ்வீட் நேம்ஸ்".


**************************************************
Kambu = Handsome king. Iranian (Persian), Indian origin.
Sambu = Wise. Indian origin

எழுதியவர் : மலர் (1-Sep-22, 6:36 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 65

மேலே