கோரோசனை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நீரிழிவு, மேகசுரம் நீங்காக் கனல்வேகம்
கூரியவுன் மாந்தம் குழந்தைகள்நோய் - பாரகபம்
வீறும் மசூரியும்போம் வேதந் தனிலிரண்டாய்க்
கூறுங்கோ ரோசனை கட்கு
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் நீரிழிவு, மேகசுரம், உடல் அனல், உள்மாந்தம், கண மாந்தம், சிலேட்டுமம், மசூரிப் புண்கள் இவை நீங்கும்; இது மான் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும் பிறப்பதாம்