குங்குமப்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பலோசை)

விந்துநஷ்டந் தாகமண்டம் மேகசலஞ் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோய் சர்த்தியிவை நீங்கவென்றாற்
குங்குமப்பூ ஓர்இதழைக் கொள்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்
தங்குசெவித் தோஷஞ் சலதோஷம் - பொங்கு
மதுரதோ ஷந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ ஷங்களறும் ஓது

- பதார்த்த குண சிந்தாமணி

குங்குமப்பூவால் விந்து நட்டம், நாவறட்சி, குடல்விருத்தி, மேகநீர், கீல்பிடிப்பு, கபம், அதிரூட்சை, பித்தம், விகுணவாதம், மண்டைவலி, கண்ணில் விழுதல், கண்நோய், வாந்தி, நீர்ப்பீநசம், மந்தம், வாயினிப்பு, பெண்களுக்கு வரும் தோஷமாகிய பிரசவமலினம் இவை தீரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 7:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே