கொலுவில் வைத்தக் கொய்யாக்கனி
கொலுவில் வைத்தக் கொய்யாக்கனி ருசிக்குமா
நேரிசை வெண்பா
கொலுவில் இருக்குமாங் கொய்யா வதையும்
வலுவில் கடிக்த்திடவாய்ப் பல்போம் -- கலுவமும்
கண்டின் ருசியறியா கண்டு வரைபட
விண்டிடுவோம் உண்மையதை இஃது
மோனைகள்
நான்கு வரிகளிலும் சீர்கள்
1 வது வரி 1. கொலு 3. கொய்
2 வது வரி 1. வலு 3. வாய்
3 வது வரி 1. கண். 3.. கண்
4 வது வரி 1 விண. 3. இ
கலுவம். மருந்து அரைக்கப் பயன்படும் கல்வம் @ கலுவம்
தசரா பொம்மைக்கொலுவில் வைக்கப்பட்டுள்ள கொய்யாப் பழத்தை கடித்தார் ருசிக்குமா ?
மாறாக பல்தான் உடையும் அதுபோல யாப்பின் மோனைகள் இல்லாத் தொடைகள்
பண்ணிசைக்க முடியாது தடுமாறும்
அதுபோல கலுவத்தில் அரைக்கப் போட்ட கற்கண்டின் சுவையை கலுவம் அப்படி எப்படி உணரும்
முடியாது. யாப்பை விட்டுத் தொலைத்து எழுதும் எதையும் கலுவம் போல ருசியை உண்ராது
1. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ் எனவும்,
2. இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும்,
. சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர், விரும்பியேற்றுக்
கொள்ளும் படி, இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது
இசைத்தமிழ் ஆகும்... அதற்காகத்தான் பண்ணமைக்க யாப்பிலக்
கண வரையரை வகுத்தார்கள்.. ஆகையால் இனிய ஒசைக்கு ஏற்ப
சொற்களைத் தேடிப்பிடித்து பண்ணமைத்து அதைப் பாடுவதே
இசைத்தமிழ்.
3. நாடகத் தமிழ் கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது
இதுவும் அன்றைய கால கட்டத்தில் இலக்கணம் தழுவி எழுதப் பட்ட
கவிதைகளை ஆங்காங்கே புகுத்தி இசைபடப் பாடி நாடகக் கூத்தை
நடத்துவார்கள்.
ஆகவே படிப்பவரும் கேட்பவரும் எப்படியும் புரித்துகொள்வார்கள்.
எழுதுபவர் இலக்கணம் தடுமாறி எழுதி ஏட்டை கெடுத்திட பாட்டை
பாடுபவன் பாட்டைக் கெடுப்பான் என்ற பழமொழி இருப்பதை
மறந்து விடாதீர்கள்கள்
எதுகை முதல் சிரில் வர மற்ற சிரில் மோனைகள் வரவேண்டும். பிரிக்க முடியாதது
எதுகையுடன் மோனை என்பதைப் கருத்தில் கொண்டு எழுதுபவன்
கவிஞன் இலக்கணம் தவறி எழுதுபவர்கள் தவறியும் இந்தப்பா
அந்தப்பா கலிப்பா வெண்பா என்று ஏன் எழுதவேண்டும். மக்கள் மனதுத்
தடுமாற பிழையான இலக்கணங்களை பின்பற்ற எதற்கு ஊக்கு விக்கவேண்டும்..
மோனைகளைத் தேடிப் போடாதவர் எப்படி இது அந்தப்பா இது இந்தப்பா
என்று தவறானதை, இலக்கணத்தை வழுவாத தொகுப்பு போல சுட்டிக்காட்டி
மற்றவரை கெடுத்தல் தமிழுக்கு செய்யும்ர் மாபெரும் துரோகம்
தினமும் நாலு தொகுப்பை பாடலென்று பதிய வேண்டும் என்று எழுது பவருடைய
நோக்க மாயின் அவருக்கு தகுந்த மோனைகளைத் தேடிப்பிடித்து எழுத நேரம் இருக்காது.
ஆகவே மோனைகளை ஒதுக்கித் தள்ளி பிழையானத் தொகுப்பைப் தினமும் பதியும் QUOTA
என்ற கணக்கில் பூக்கள் தென்றல் வானவில் நிலா கடல் வானம் பொழில் எழில் குளிர்ச்சி
மணம் வீசும் பூங்கா ஒடை நீர்வீழ்ச்சி இதயம் உதயம் என்றெல்லாம் வார்த்தைகளால் நிரப்பி
அள்ளித் தெளிக்கிறார்கள். இவைகள் எல்லாம் இலக்கியமென்ற இலக்கணப் பாடல்
கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. தாங்கள் எழுதும் இலக்கணம் இல்லாத தொகுப்பை
இன்ன இலக்கணப் பாடல் என்று வீண் ஜம்பமாக தொடர்ந்து சொல்லிக்கொள்ளு்தல
அவமானமாகக் கொள்ளவேண்டும். எழுந்து நிற்க முடியாதவனுக்கு யேழு எட்டு பட்டாக்
கத்தி எதற்கு ?
.........