கண்ணன்

உன்னை மறந்து
உன்புகழும் மறந்து
என்னையே நானெல்லாம்
என்று மூடனாய்
எண்ணி வாழ்வை
வீணா கழித்தேன்
இன்று துன்பம்
என்னை வந்துசூழ
உன்பாதமே கதி
என்று என்னுள்
எண்ணம் எழுந்து
உன்னையே இடையறாது
நினைக்க வைத்தது
இதுவும் உன்லீலையே
அல்லவா மாயவா
மாதவா கண்ணா
என்கண்கள் காணும்
நீல மாணிக்கமே கடல்வண்ணனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Sep-22, 1:15 pm)
Tanglish : Kannan
பார்வை : 31

மேலே