திருமணம்
தனிமையை இரசிக்கையில் தான்!
புரளி பேசும் ஓர் கூட்டம்!
திருமணம் நிகழவில்லை!
ஏன்!
என்ன குறை!
ஊரெங்கும் முனுமுனுப்பு!
ஒருவர் வாழ்க்கையை!
ஒருவர் விமர்சிப்பதில்!
இத்தனை இன்பமா!
மனம் என்பதை பார்க்காத!
மனித குலம்!
அகவையை மட்டும்!
சரியாக கணித்து!
மணம் முடித்து வைக்கின்றது!
கல்யாணம் எனும் சூறாவளி!
சிக்கி தவிக்கும் மனம்!
தலை சுற்றிடும் சுழல்!
வெளியே வேடம்!
உள்ளே குமுறல்!
எத்தனை பெரிய நாடகம்!
திருமணம்!
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!
அவற்றை இரசித்து வாழ்ந்திடு!
..... இவள் இரமி.....