இவனைத் தொழுதால் நவகிரகங்களும் பிடியை தளர்த்திடும்

வினை தீர்க்கும் யானை
முகத்தோனுக்கு ஒரு தாலாட்டு /
மோதகப் படையலிட்டு
நான் பாடுவேன் ஒரு பாட்டு/

தொந்தி விநாயகருக்கு
உரக்கப் பாடிடுவேன்
தந்திப் பாட்டு /
சந்தி அமர்ந்த
தனையனுக்கு வேதம்
ஓதும் முதல் பாட்டு/

ஆறுமுகன் அண்ணனிடம்
ஆசிர்வாதம் கேட்டு /
இசைத்திடுவேன் பணிவுடன்
எத்தயோ பாட்டு /

சக்தி மைந்தனின்
சக்தியிலே மகிழ்ந்து
பாடிடுவேன் நானும்
ஓர் புராணப் பாட்டு /

ஐங்கரனை அழைத்து
அரோகரா கோசமிட்டு /
ஐம்புலனையும் அடைக்கி
பாடிடுவேன்
செந்தமிழில் புதுப் பாட்டு/

முக்கண்ணனுக்கு
முந்திய இறைவா /
அள்ளியிறைத்திடு
கருணைக் கடலை தலைவா /

என கருணை மனுவோடு
கண் கலங்கிப் பாடிடுவேன்
பிள்ளை உனக்கான துதிப்பாட்டு /

அம்பிகையின் மகனே
நம்பி ஆண்டான் நம்பியே
தும்பிக்கை கொண்டு
ஆசிர்வதித்து துயர் துரத்தி
நம்பிக்கை கொடுத்திடும் கஜமுகனே /

நீ அவதரித்த இந்நாளை
ஆராதனையோடு
வண்ணப் பூ தூவி வணங்கி நின்று பாடுகின்றேன் உமக்காக
வாழ்த்துப் பாவொன்று/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (11-Sep-22, 1:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 42

மேலே