வழி தேடக் கூடாதோ
கடல் மட்டம் உயர்கிறதென்று
காலம் முழுதும் புலம்பி நின்று
கூக்குரலிட்ட நேரத்தில்
ஆற்று வெள்ளமும் ஓடி வந்து
அரவணைப்பது போல்
அள்ளி எடுத்து ஏழைகளை அழிப்பது
அநீதியென இயற்கை கூடவா
அறிந்திருக்கவில்லை
அதிர்ஷ்டம் ஒரு முறை வரும்
ஆனால் தூரதிர்ஷ்டம்
அடிக்கடி வந்து மக்களை
அல்லல் படுத்தி அழிப்பதை
படைத்தவனிடம் சொல்லி
பரிகாரம் தேட முடியாமல் போனது
அவனோட கோயிலும் ஆற்றில்
அடித்து சென்றதால் தான்
அண்டை நாடுகளோடு
சண்டையிட்டு
சாதனை படைக்க நினைப்பவர்கள்
உலகில் வாழும் மக்களெல்லாம்
ஒரு தாய் பிள்ளைகள் போல்
ஒற்றுமையோடு சிந்தித்து
காற்றில் அதிகரிக்கும்
கார்பண்டை ஆக்சைடை சீக்கிரமா
குறைக்க வழிதேடக்கூடாதோ !