தும்பச்சாரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஈளை யுடனே இரைப்பு வலிவாதம்
ஆளைவிடாக் குன்மநோய் ஆயதும்போம் - வேளையிமைப்
போதி(ல்)வெல்லும் வேழப் புருவச் சிலைமயிலே
கோதி(ல்)தும்ப சாரத்தைக் கூறு
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் ஈளை, (கோழை) இரைப்பு, வாயுவலி, திரிதோட குன்மம் இவை நீங்கும் .