புரியாத பிரிவு
புரியாத பிரிவு.
புரியவில்லை?
உன்னை எனக்கு
புரியவில்லை!
என்னை உனக்கு
புரியவில்லை!
அன்றே இது
தெரிந்து இருந்தால்!
இன்று இந்த நிலை
வந்திராது.
சந்தித்த போது,
கவர்ச்சி அறிவை
மறைத் இருந்தது,
கவர்ச்சி
மறைந்த போது
அறிவு கேட்டது!
இவளை ஏன் எனக்கு
புரியவில்லை,
இவனை ஏன் எனக்கு
புரியவில்லை.
இந்த புரியாமை
எனக்கும் உனக்கும்
சொந்தம் அல்ல,
இது உலகிற்கே
சொந்தம்.
இதை நாம்
புரிந்து கொண்டால்!
நீயும் நானும்
ஒன்றாய்
வாழ்ந்திடலாம்,
இல்லை நாம்
ஒருவரை ஒருவர்
புரியாத
புதிராகவே பிரிந்து
சென்றிடுவோம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.