பிகு பண்ணறாளே

ஆசையா பெத்த பொண்ணுக்கு
'பிகு'னு இந்திப் பேரை
சோதிடர் சொன்னபடி வைத்து
செல்லமாய் வளர்த்தோமே!

வளர்ந்து பள்ளி சென்றபின்னே
தொலைக்காட்சி விளம்பரத்தில்
காணும் நொறுக்குத் தீனிகளை
தின்னு ருசி கண்ட பின்னே,

கவர்ச்சியான நொறுக்குத் தீனி
எப்பவும் வேணுமின்னு
பிகு பண்ணி தொல்லைத் தந்து
அழுது அடம் பிடிக்கிறாளே!

@@@@@@@@@@@@@@@@@@@

Pihu = chattering of birds. Unisex name

எழுதியவர் : (27-Sep-22, 5:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

மேலே