குண்டானு பேரு வச்சது

நான் என்னத்தச் சொல்லுவேன். யாருகிட்டச் சொல்லுவேன். அந்த சோசியர் பேச்சைக் கேட்டு ஏமாந்து போயிட்டனே.

முதல் குழந்தை பையனா பொறந்திருச்சுனு மனைவி ரொம்ப சந்தோசப்பட்டா. மனைவிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும்னு நான் ஆசையா இருந்தேன்.

அடுத்த நாளே சோசியர்கிட்டப் போனேன். பிறந்த நேரம் எல்லாம் கேட்டு அஞ்சு நிமிசத்தில சாதகத்தைச் அச்சடிச்சுக் குடுத்தாரு. "தமிழ்ப் பேரு வேண்டாங்க. தமிழர் வழக்கப்படி வேற மொழிப் பேரை வைக்கிறதுதாங்க நல்லது. தமிழருக்கு அழகு இந்தி அல்லது சமஸ்கிருதப் பேரை
வைக்கிறதுதாங்க நல்லது"னு சொன்னேன்.

"பையன் ராசிப்படி அவனுக்கு 'குன்டா'னு பேரு வச்சா அவன் வாழ்க்கை நல்லா அமையும்"னு சொன்னாரு. "யாராவது என்னையா இந்தப் பேரைப் பையனுக்கு வச்சிருக்கிறயே"னு கேட்டா. இது இந்திக் 'குன்டா'. தமிழ்க் 'குண்டா' இல்லன்னு சொல்லிடு தம்பி"னு சொன்னாரு.

ஊருல‌ பையன் பேரு இந்திப் பேருனு பேரைச் சொன்னதும் எல்லாரும் "குண்டா. ஸ்வீட் நேம்"னு சொன்னாங்க.

இப்ப என்ன வருத்தும்னு கேட்கிறீங்களா? அவனைப் பாருங்க. அண்டாக் கணக்கில் சோறும் தீனியும் தின்னுட்டு சித்தானை மாதிரி 'குன்டா', 'குண்டா'கி நிற்கிறான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Kunta = Hair. Unisex Sanskrit name.

எழுதியவர் : மலர் (27-Sep-22, 7:33 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே