அக்டோபர் முதல் தேதி மஹாத்மா காந்தி பிறக்கவில்லை
அக்டோபர் முதல் தேதி லால்பகதூர் பிறக்கவில்லை
ஆயினும் எளிமையும் நேர்மையும் நாட்டில் இருந்தது!
அக்டோபர் முதல் தேதி மஹாத்மா காந்தி பிறக்கவில்லை
மக்களிடம் வாய்மையும் ஒழுக்கமும் நிச்சயம் இருந்தது!
அக்டோபர் இரண்டாம் தேதி அன்று லால்பகதூர் பிறந்தார்
நாட்டில் எளிமையும் நேர்மையும் மேன்மேலும் செழித்தது!
அக்டோபர் இரண்டாம் தேதி அன்று காந்தியடிகள் பிறந்தார்
வாய்மையும் ஒழுக்கமும் சேர்ந்து மேலும் சக்தி பெற்றது!
அக்டோபர் இரண்டாம் தேதி அன்று காமராஜர் இறந்தார்
அன்றிலிருந்து நாணயத்தின் முகம் ஒளியை இழந்தது!
லால்பகதூரை போல ஏராளமான இந்தியர் வாழ்ந்தனர்
ஆனால் அம்மனிதர்கள் அனைவரும் பிரதமராகவில்லை
காந்தியைப்போல் எண்ணற்ற இந்தியர் வாழ்ந்திருந்தனர்
இவர்கள் அனைவரும் தேசத்தந்தை ஆகமுடியவில்லை!
உலகில் அஹிம்சையுடன் வாழ்பவர் லட்சத்தில் இருப்பார்
நேர்மையுடன் வாழ்ந்து வருவோர் எண்ணற்றவர் இருப்பார்
இருந்தும் நாணயம் கண்ணியத்துடன் வாழ்பவர் குறைவே!
பெருந்தலைவரின் அரசியல் நாணயம் உடையவர் கடுகளவு
அமரர் கக்கன் போன்ற அரசியல்வாதிகள் இன்று இல்லையே!
விஞ்ஞானம் வளர வளர குணமும் ஒழுக்கமும் குறைகிறதே
பணப்புழக்கம் அதிகமாகையில் நல்ல பழக்கங்கள் ஒளியுதே
செல்போன் ஆட்சி நடக்கும் இவ்வுலகில் மகிழ்ச்சி தேயுதே!
பலரிடம் சிரிப்பை காண்கிறோம் அவை இதய சிரிப்புதானா?
பலரை நகை அலங்கரிக்கிறது நகைச்சுவை அலங்கரிக்கிறதா?
புறத்தே அனைவரும் நல்லவர்கள் போல்தான் தெரிகின்றனர்
ஆனால் நல்லது என்பது என்ன இதை எத்தனை பேர் அறிவார்?