ரசித்திடுவோம்ருசித்திடுவோம்

மோகம் எனும் மேகம்
வேகமாய் கலைந்து போகும் - சூடான
தேகம் நடை தளர்ந்து
குளிர்ந்து போகும் - படமெடுத்து ஆடிய
நாகம் தலை குனிந்து
அடங்கி போகும் - வாய்நிறைந்த
தாகம் தணிந்து
நா வறண்டு போகும்.
போகம் அது வாழ்வில்
சொற்ப நாட்கள் மட்டுமே...
சோகம் அதுவும் கடந்து
மறைந்து போகும் - வாழ்க்கைச் சக்கரத்தின்
பாகம் நாம் வாழும்
இவ்வாழ்நாள் மட்டுமே.
வாழ்வை
ரசித்திடுவோம்.....
ருசித்திடுவோம்....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Oct-22, 8:45 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 74

மேலே