அவள் புன்னகை சிந்திடும் போது

ஆழ்கடல் சிப்பியின் வயிற்றில்
பிறப்பெடுத்து
அழகிய பெண்ணின் கழுத்தினில்
அணியாகி சிரிக்கும்
வெண் முத்துக்களே
அவள் செவ்விதழ் திறந்து
புன்னகை சிந்திடும் போது
நாணி நிற்பதேனோ ?

யாப்பு சாரா புதுக் கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-22, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே