மயக்கும் பெயர்

என்னடி கொடி (Latha) உன் பையனுக்கு 'கஞ்சி'னு புதுமையான இந்திப் பேரை வச்சுட்டோம் பீத்திட்டு திரியற. உனக்கு மட்டும் தான் புதுமையான இந்திப் பேரை வைக்கத் தெரியுமா? நானும் தமிழச்சி தான்டி. திரைக் கால தமிழர் நாகரிகத்தின் படி படிக்காதவங்களே தமிழுணர்வோடு இந்திப் பேருங்களைத்தான் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க‌. கல்லூரித் முதுநிலைப் பட்டம் பெற்ற நமக்கு இந்திப் பெயர்கள் மேல எவ்வளவு வெறி இருக்கும்.
#@##@@#@
நீ சொல்லறது சரிதான்டி தங்கம் (Hema). உனக்கு போன் வாரம் பொறந்த பையனுக்கு என்னை மாதிரி உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைக்கு வைக்காத பேரை வச்சு உன்னோட இந்திப் பெயர் வெறியைத் தணிச்சிட்டயா.
@@@@@@@@@@
ஆமாம்டி. வருங்காலத்தில் என் பையன் பெயரைக் கேட்டாலே போதும்.‌ அழகான பொண்ணுங்க எல்லாம் காதல் மயக்கத்தில் அவனையே சுத்திச் சுத்தி வருவாங்கடி.
@@@@@@@@@@
அப்பிடி என்னடி புதுமையான பேரை வச்சுட்ட?
@@@@@@
மனிதர்கள் தோன்றிய காலத்திலே இருந்து இன்னிக்கு வரைக்கும் நிலா காதலர்களுக்கு மயக்கம் தரக்கூடியது. நிலாவைக் கையில பிடிச்சுக் குடுக்கச் சொல்லி பாட்டெல்லாம் பாடுவாங்க. என் பையன் பேரு அது மாதிரி பேரு தான்.
@@@@@
சீக்கிரம் சொல்லுடி.
#@@@@@#
என் பையன் பேரு 'மயங்க்'. இவன் இளைஞனாக இருக்கிறபோது இவன் பேரைப் பொண்ணுங்க கேட்டாலே மயங்கிடுவாங்கடி.
@@@###
அடியே திட்டம் போட்டு இந்தப் பேரைக் தேடிக் கண்டுபிடிச்சு உன் பையனுக்கு வச்சிருக்கிற.‌ உம். நீ பெரிய வித்தகடீ.
@@@@@@@
Mayank =Lord Chandra (Moon)

எழுதியவர் : மலர் (4-Oct-22, 3:07 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : mayakkum peyar
பார்வை : 94

மேலே