நல்லாசான் இல்லையடி பாப்பா

நேரிசை ஆசிரியப்பா


இலக்கண மாகவே இருந்த நம்முன்
தமிழை பிழைபட புதியது புதிய
தென்று பாழில் தள்ளிக் கொன்றார்
யாப்பிற்கு பலமாய் ஆப்பு வைத்து
புதுக்கவிதை எழுதிட நிலைக்கா போனது
ஓரசையை ஒருவரி எனக்கூறி சிதைது
ஈரசை இருசீரில் பொறுத்தி கீழ்பாச்சி
ஏருழுது விதைத்தூவா முளைவிக்கப் முயற்சி
செய்து மந்திரத் தில்மாங்காய்
முளைக்கு மென்று அண்ணாந்து பார்த்தாரே


தமிழைக்கற் பிக்க தமிழில் உளரோ
தமிழாசான் யாருமிலை பாரு

......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Oct-22, 7:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 277

மேலே