திருக்குறள் பெருமை
நேரிசை வெண்பா
கருஞ்சனி ஒன்றுபல வாந்தேவன் பாரில்
திருவள் ளுவரின் தெருளாம்-- அருமை
பொருந்தப் படைக்க உரிமைப் பிறரும்
மருளில் உளரிடும் பாரு
தெருள். .=. தெளிவு
சாத்தான் என்கிற சனி உலகில் ஒன்றானாலும் கடவுள் என்பவர்
நாட்டுக்கு நாடு மாறுபட்டு நூற்றுக் கணக்கில் இருந்தது
ஐரோப்பியர் பல கடவுளையும் வழிபட்டார்கள். இத்தாலி கிரீஸ் பாரசீகம்
ஆர்மீனியா இன்னும் பலபல நாட்டில் பலகடவுள்கள் இருந்தார்கள்.
பைபிளில் பல இடங்களில் கர்த்தரே பாபிலோனியா ஆரிமீனியாவின்
பாகால் கடவுளர் வணங்கக் கூடா தென்று சொல்லி யிருக்கிறார்...
வள்ளுவனின் கருத்து பொதுவான கருத்து உலகுக்கு ஏற்ப பொருந்துமாறு
உள்ளதால். அதை பொதுமறை என்றும் உலக மறை என்றும் தமிழர் மார்தட்டிக்
கொண்டனர்.இன்று அதுவே வினையாய்ப் போனது.அறுவகைதமிழ் மதத்தை
இஷ்டம் போலத் தமிழர் தழுவ உண்டாக்கி இருந்தும். பலதும் பச்சோந்திகளாய்
ஏதோ கண்டவன் போல பிறநாட்டின் மதத்தினை பின்பற்ற ஒடிவிட்டார்கள்.
அவர்கள் திருக்குறளையும் கொள்ளையடித்து கிருத்துவ மதத்திற்கு பெருமை
சேர்க்கப் பார்க்கிறார். இப்படி நடக்குமென்றுதான் வள்ளுவன் ஆங்காங்கே
தாமரையாள் (லட்சுமி) மூதேவி, பிரம்மன்,இந்திரன் என்றும் உலகளங்தான்
எமன் , பேய்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இறைவனடி பற்றி வேறு மதத்தில் இல்லை.
மறு பிறப்பு எழு பிறப்பு மேலுலகம் வானுலம் போன்ற (கிருத்துவம் முஸ்லீம்
மதத்திற்கு அடிப்படையில் பொருந்தாத ) இந்து மதத்தின் கோட்பாடுகளை
புகுத்தி யுள்ளார்.. முஸ்லீமும் கிருத்தவனும் முஸ்லீமும் மறு பிறப்பையும்
யேழு பிறப்பையும் ஒத்துக்கொள்வார்களா ? மாட்டார்கள்.
பாவம் நாரகிற்கு கொண்டு போகுமென்பது இந்துமதம். பாவத்தைத் கடவுள்
மன்னிப்பார் மேலும் பாதிரியாரிடம் சொன்னால் அவர் கடவுளிடம் பேசி
மன்னிப்பு வாங்கித்தருவார் என்பதும் வள்ளுவர் சொன்னதில்லை பாருங்கள்