உனக்காக மட்டும்தான்
உனக்காக
உனக்காக மட்டும்தான்
இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படைப்பில்
இருக்கும் ஒவ்வொன்றும்
உனக்காக
உனக்காக மட்டும்தான்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதையெல்லாம்
ஆண்டு ....அனுபவிப்பதற்கு
பிறப்பு முதல் இறப்பு வரை
அறிவும் அனுபவமும்
உன்னுள்ளே
புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
சுய அறிவையும் ஏட்டறிவையும் கொண்டு
நீதான் உன் புதையலை
தேடிக்கொள்ள வேண்டும்.
இந்த ஆடுபுலி ஆட்டத்தில்
ஆடு புலியை வென்றிடவேண்டும்.
காலங்கள் மாறும்....கோலங்கள் மாறும்...
காட்சிகள் மாறும்...சாட்சிகள் மாறும்...
உன்னைத் தேடித் தேடி
உன்னை நீ முழுதாய்
அறிந்து கொண்டால்
வெற்றிமாலை
உன் கைவசம் சேரும்.