புன்சிரிப்பு
ஆயிரம் இன்னல் இருக்கையிலும்
அதை வெளிகாட்டாமல்
நலம் என கூறுகையில் ...
வெளித்தோன்றும் அச்சிறு புன்முறுவல் மறைப்பதோ எத்தனை துயரங்கள்
நலமா எனும் போது நலம் என
சிரிக்கையில்
என் அச்சிறு முறுவலுக்கே தெரியும்
அது புன்சிரிப்பல்ல புண்சிரிப்பென்று ..