சிகிச்சை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சூதகந்தி தாதுபஸ்பஞ் சொர்ன்னநாட் டார்சிகிச்சை
ஓதரிய மூலியிம்மண் ணூர்ச்சிகிச்சை - வேதடரும்
சத்திரக்ஷா ராக்கினிநி சாசரச்சி கிச்சையொன்றே
முத்தரத் தாகும் மொழி
- பதார்த்த குண சிந்தாமணி
சிகிச்சை மூவகைப்படும், இரசம், கந்தம், பற்பம் முதலியவைகளைக் கொண்டு செய்வது தேவகண சிகிச்சை. மரம் முதலான மூலிகைகளைக் கொண்டு செய்யப்படுவது மானுட சிகிச்சை. அறுத்தல், காரம்
வைத்தல், சுடல் முதலான செய்யப்படும் மருத்துவம் இராட்சச சிகிச்சை என்பன அவ்வகையாம்.