உறக்கம் நீக்கி மருந்தூட்டும் உபாயம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வேசையர்கூத் தொன்றொழித்த வேறுவே றாங்கூத்தால்
ஆசியத்தால் கீதத்தால் அற்புதத்தால் - வீசுபகல்
தூக்கமருள் நீக்கியுறை துய்ப்பித்த ணங்கையுள்ளார்க்(கு)
ஊக்கமருள் வார்மருத்து வர்
- பதார்த்த குண சிந்தாமணி
பலவகை கூத்து, இசை போன்றவற்றில் ஈடுபடுத்தி பகல் தூக்கத்தை விலக்கி நோயாளிக்கு மருத்துவர் மருந்தூட்டுவர்