பாதையும்_பாதணியும்

#பாதையும்_பாதணியும்
வலியவர்க்கு!
வண்ண வண்ணமாய்!
வித விதமான !
ஏற்றம் சரிவுமாய்!
விலையில்!!!


வறியவர்க்கு!
வறுமைக்கேற்ப!
இலையும் தழையும்!
தூக்கியெறிந்த!
நெகிழி பொருளையும்!
வடிவமைத்தும்!

எத்தனை தூரம்!
பயணித்தாலும்!
தொடர்வேன்!
தன்னிலை தவறும் வரை!!!

கல்லும் முள்ளும்!
காயப்படுத்துவதை!
முடிந்தவரை கட்டுபடுத்துவேன்!!!

பயணிக்கும் பாதையில்!
சுமைதாங்கி!
பாதம் தாங்குவதையே!
பணி என தொடர்வேன்!!!

வெறுத்தாலும்!
இழிவு சொல் ஏசினாலும்!
அன்புடனே!
தாங்கி கொள்வேன் பாதத்தை!!!

..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (22-Oct-22, 8:14 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 38

மேலே