இட்டக் கடைத்தரார் சுலாக்கோலாற் கானும் சொரிவதாம் ஆபோற் சுரந்து – அறநெறிச்சாரம் 183
நேரிசை வெண்பா
இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார் - நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து 183
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தம்பால் உள்ள பொருள்களை நெருங்கிய நட்பினர்களுக்கும் கொடாமலும் பிச்சை யேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் உலோப குணமுடையார்,
உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக் கொண்டு அடிக்க வருபவனுக்கும் பசு கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல் போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும்.