நேரம்
காலையிலிருந்தே கேஷ் கவுண்டர்ல நல்ல கூட்டம்.கேஷியர் சிறு வயதுதான். சமாளிக்க கூடிய ஆள் ஆனால் கடு கடு..எல்லாமே டைம் பிரகாரம்தான்.
மணி இரண்டு ஆக ஒரு நிமிஷம்.
சட்டென எழுந்து படேருன்று
சாத்திட்டு லஞ்ஜுக்கு எழுந்தான்.
சார்! இந்தப் பணத்தை வாங்கிக்கிங்க..வயதான முதியவர்
கையை நீட்டினார்.
நாங்க சாப்பிட போகவேண்டாமா
உட்காருங்க..
நான் மொதல்லேயே வந்திட்டேன்யா..
அதான் வாங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க..
எழுந்தவாறே பதில் சொன்னபோது..
எஸ்க்யூஸ் மி......ஒரு இளங்குரல்..
கவுண்டருக்கு முன் தவழ்ந்தது.
நின்றது அவள் மட்டுமல்ல அவள் யூஸ்
பண்ணியிருந்த ஸ்பிரேயின்
நறுமணமும்தான்.
எஸ்...வழிந்தான்..
சார்! ஒரு தவுசண்ட்க்கு ஹண்ரேடு
ஜேஞ்ச்..வேணும்..அவசரம்..வெஹிகில் ரோட்டில பார்க் பண்ணி வந்திருக்கேன்...குழைந்தாள்.
பட படவென சில்லரை கொடுத்து
இரு ஐநூறை வாங்கி கேஷுவலாக
கவுண்டரில் போட்டு விட்டு அவள் சொன்ன தாங்க்ஸை வாங்கிக்கொண்டு கிளம்பினான்
சாப்பிட.
பெரியவர் மனதிற்குள் ம்..ம்..
காலம் கலிகாலம் என்றவாறே
சேரில் போய் உட்கார்ந்தார்.
அரைமணிக்குப் பிறகு....
கேஷியர்... கவுண்டரில்..... சாப்பிட்ட
களைப்பில்...ரிலாக்ஸ்டாக
மேலே கிடந்த இரண்டு ஐநூறை
மெஷினில் போட்டவன் அதிர்ந்தான்.
இரண்டுமே கள்ளநோட்டு.
ஏசியிலும் வியர்த்தது.
திரும்பத் திரும்ப வாசலையே
பார்த்தவன்..மனதில் சுறுக்கென்று
தைத்தது.
மீண்டும் எதிரே நின்ற பெரியவரைப்
பார்த்து ஐயா..மன்னிச்சிடுங்க
என்றான் குற்றஉணர்வுடன்.
பெரியவர் ஏதோ புரிந்தவாறு..
பார்த்து தம்பி..கொஞ்சம் நிதானமாக
வேலையைப் பாருங்க..
என்றவராய் நகர்ந்தார்.