காதல் இன்பம்

நேரிசை வெண்பா

காமுகன் சொல்லிடக் காதலியுங் கேட்டிடத்
தாமும் மகிழ்ந்து கலந்திடுவர் ---. காமுகன்
ஏமுரவர் சொல்லியப் பேச்சு எழுத்திற்கு
யாமும் மகிழ்ந்திடோம் யாங்கு


ஏமுருவர். == இன்புறுவர்

நேரிசை ஆசிரியப்பா

வெட்டிப் பயலவன் கிறுக்கும் சொல்லும்
காதல் சொட்டிடும் கவிதை யாகுமா
கம்பனோ இவனும் காளி தாசனோ
இவனுடை கிறுகலை யாமும் ரசிக்க
இங்கு வந்தவெகு வெறியர்
காதல் காதல் என்றலை வதேனோ



....

எழுதியவர் : பழனி ராஜன் (2-Nov-22, 8:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 207

மேலே