கந்தனை போற்றுவோம்
கந்தனை போற்றுவோம்
அஞ்சுதலை போக்கி அருள் புரிவாய் போற்றி
ஆறுதல் அளித்து ஆற்றாமையை நீக்குவாய் போற்றி
இறைவியின் சக்தியை வேலாக தாங்கியவனே போற்றி
ஈசனின் முக்கண்ணில் இருந்து தோன்றியவனே போற்றி
உமைக்கு உகந்தவனே உயரிய தமிழ் கடவுளே போற்றி
ஊழ்வினைகளை தீர்த்து எங்களை உய்விப்பவனே போற்றி
எங்கும் நிறை பரமனுக்கு உபதேசம் செய்தவனே போற்றி
ஏறுமயில் கொண்டு உலகை வலம் வந்தவனே போற்றி
ஐங்கரன் உதவியால் வள்ளியை மணம் புரிந்தவனே போற்றி
ஒன்பது படை வீரர்கள் சூழ அரக்கனை அழித்தவனே போற்றி
ஓம் என்னும் பிரணவத்தின் பொருள் உரைத்தவனே போற்றி
ஒளவைக்கு சுட்ட பழம் வழங்கி ஆணவம் அழித்தவனே போற்றி
அகத்திருள் நீக்கி மோட்சம் அளிப்பாய் போற்றி