அறிவிற் கறிவாவது மறுபிறப்பு மற்றீண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம் 192

இன்னிசை வெண்பா

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ(து) எண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி. 192

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஆராயின் அஞ்சாமையுள் அஞ்சாமையாவது தன்னிடம் குறையுளதாயின் அதனைக் கண்டு வருந்துதலாம்;

நல்ல செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம்;

அறிவினுள் அறிவாவது இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய நெறியில் ஒழுகுதலாம்.

குறிப்பு:

தறுகண் - அஞ்சாமை, ''தந்திரிக் கழுகு தறுகண் ஆண்மை'' என்ற தொடரில் இப்பொருள் காண்க.

தறுகட்டறு கட்பம் - பெருமைக்கெல்லாம் பெருமை என்பாருமுளர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-22, 5:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே