பிறவிப் பிணியினைப் பெயர்க்கும் வழி – அறநெறிச்சாரம் 191

நேரிசை வெண்பா

உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி - உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்ற தாகும் பிறப்பு 191

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அறிவை அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி யென்னும் வண்டியில் ஐம்பொறி களாகிய புரவிகள் ஐந்தையும் சேர்த்துப் பூட்டி செலுத்தும் நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன் தெளிந்த அறிவினையும் உடையனாயின் பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.

குறிப்பு:

உணர்ச்சி உசா புலன் இவை முறையே அச்சு வண்டி புரவிகளாக உருவகிக்கப்பட்டுள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-22, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே