அமைதி
தும்பை விட்டு வாலை
பிடிப்பது போல்
ஆழ் மனதிலே ஆயிரமாயிரம்
ஆசைகள் அலைகடலென
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க
எல்லோர் மனமும்
வேண்டுவதென்னவோ
அமைதியான வாழ்க்கை...!!
வள்ளுவனும் புத்தனும் சொன்ன வாழ்க்கை வழிமுறைகளை
புறம் தள்ளிவிட்டு
எண்ணமும் செயலும்
எதிரெதிர் திசையில் பயணம்
செய்ய அனுமதிக்கும்
மனிதனின் மனம்
அமைதியை தேடுவதில் அர்த்தமில்லை...!!
--கோவை சுபா