கையூட்டு

கையூட்டு

தொற்றுகின்ற தொற்றினைப்போல் தொற்றிவரும் கையூட்டால்
தொல்லைபல எங்கெங்கும் பெருகு தன்றோ ?
குற்றங்கள் செய்துவிட்டு தண்டனைக்குத் தப்பிடவே
கொட்டியங்கு கொடுப்பதுவும் ஒழிவ தெப்போ ?
கொற்றவனும் குறைவின்றி கையூட்டை வாங்குவதால்
கொடுமைபல நாட்டினிலே நடக்கு தன்றோ ?
முற்றிலுமாய் அதைஒழிக்க மருந்தொன்றும் கிட்டாமல்
மனிதஇனம் இன்றிங்கு நோகு தன்றோ ?

வரிமேலே வரிபோட்டு வாட்டிவாட்டி எடுத்தபோதும்
வஞ்சகரோ கையூட்டை மறப்ப தில்லை .
நரிபோலும் பலரிங்கே வஞ்சகத்தால் வாழ்ந்தபோதும்
நீதியிங்கே உயிர்பெற்று வதைப்ப தில்லை.
பொறிவைத்து பிடித்தபோதும் கையூட்டை அவர்கொடுத்து
புதுவாழ்வு வாழ்ந்திடவே வருவ ரன்றோ ?
தெரிந்திருந்தும் மக்களெல்லாம் சான்றிதழ்கள் பெறுவதற்கே
தருகின்ற கையூட்டும் வீழ்வ துண்டோ ?

கொள்கையற்ற அரசியலும் கொடிகட்டி பறப்பதற்கே
கையூட்டே அதிகாரம் கொள்ளு தன்றோ ?
கள்ளவாக்கு என்றாலும் நல்லவாக்கு என்றாலும்
கையூட்டுக் கொடுத்திடலே வேண்டு மன்றோ ?
பொல்லாத கையூட்டால் உலகமதும் வாழ்வதனால்
பெருமையுடன் கையூட்டைப் போற்ற லாமோ ?
கொல்வதற்கும் கொலைச்செயலை மற்ப்பதற்கும் கையூட்டைக்
கொடுத்திட்டால் தண்டனைகள் இல்லை யன்றோ ?

எங்கெங்கும் கையூட்டே நிரம்பியிங்கு இருப்பதனால்
எல்லையில்லாத் துன்பங்களே பெருக தன்றோ ?
வங்கியிலே விரைவாக கடன்வாங்க வேண்டுமெனில்
வாங்கிடுவார் கையூட்டை மறக்கா தென்றும்.
உங்களுக்காய் உழைப்பதற்கே உறுதிபூண்ட தலைவர்தான்
என்றாலும் கையூட்டைக் கறப்ப துண்டு >
பொங்கிஎழும் எழுகின்ற காலமொன்று வரும்வரையில்
போகாது கையூட்டு புரிந்து கொள்வீர்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (11-Nov-22, 9:58 pm)
பார்வை : 65

மேலே