நகைச்சுவை
பூவும் பொட்டும்!
😊😊😊
அரண்மனை மாதிரி வீடு.
வயதான கணவன் மனைவி மட்டும்
இருக்காங்க..தாத்தா ரொம்ப ஜோவியல் டைப்.. இன்னொசன்ட். மகன் மகள்
பாரின்ல..
தனியா இருக்கிறதை புரிஞ்சுகிட்டு
திருடன் இரவு 12 மணிக்கு பெட்ரூமிற்குள் நுழைந்தான்..
திடுக்கிட்டு எழுந்த இரண்டு பேரையும் தனித்தனியாக தூணில்
கட்டினான். டேய் போயிடு..
சத்தம் போட்டு ஊரைக்கூட்டிருவேன்னு கத்தினார் தாத்தா.
திருடன் கோபமா தாத்தாக்கிட்ட வந்து கத்தியை கழுத்தில் வைத்து
உஷ்ஷ் ...ன்னான்.
அப்ப பார்த்து பாட்டி அய்யய்யோ
என் பூவையும் பொட்டையும்
பறிச்சுடாதேடா...என்று கத்தினாள்.
தாத்தா கோபமாய் ஏன்டி நானே
சாகப்போறேன்.
உனக்கு பூவும் பொட்டும்தான்
முக்கியா... தேவைன்னா எடுத்திட்டு
போகட்டுமேடி..ன்னு
சொன்னாரே பார்க்கலாம்.
***** ****** ********