நீநடக்கும் வீதியில் பௌர்ணமி
மலர்முகம் மெல்லக் கலைந்தாடும் கூந்தல்
புலர்காலை புன்னைகைப்பூ நீ
கருவிழிகள் காமன் படையோகா தல்தன்
அருவியோ மீனோமா னோ
அந்தியின் சந்திரன் போலழகி னில்வந்த
இந்திரலோ கத்துரம்பை யே
மல்லிகை ரோஜா பொறாமையில் பார்த்திடும்
புன்னகைப் பூமலர் நீ
நிலவு வராதநாள் தன்னிலே நீநடக்கும்
வீதியில் பௌர்ணமி யோ
----வள்ளுவரின் காமத்துப்பால் குறட்பா
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
தூண்டிய பாக்கள்