அவள் ஒரு அதிசயம்

🤎🤍🤎🤍🤎🤍🤎🤍🤎🤍

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🤎🤍🤎🤍🤎🤍🤎🤍🤎🤍🤎


என்னவளே !
கவிதை நடையை
உன் நடையில் கண்டேன்....

தமிழின் இனிமையை
உன் மொழியில் கண்டேன்....

எட்டாவது அதிசயத்தை
உன் படைப்பில் கண்டேன்....

கம்பன் வர்ணனையை
உன் வடிவத்தில் கண்டேன்...

இருளின் அழகை
உன் கூந்தலில் கண்டேன்...

ஈர்ப்பின் வலிமையை
உன் விழியில் கண்டேன்....

இழப்பின் சுகத்தை
நம் காதலில் கண்டேன்....

ஆறுதலின் அருமையை
உன் தோள்களில் கண்டேன்..

ஆனந்தத்தின் எல்லையை
உன் அன்பில் கண்டேன்....

என் மனிதத்தை
உன் மடியில் கண்டேன்...

அமைதியின் சுகத்தை
உன் அணைப்பில் கண்டேன்...

என் வாழ்வின் அர்த்தத்தை
உன்னோடு
வாழ்வதில் கண்டேன்......!!!

*கவிதை ரசிகன் குமரேசன்*

🤍🤎🤍🤎🤍🤎🤍🤎🤍🤎🤍

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-Nov-22, 6:15 pm)
Tanglish : aval oru athisayam
பார்வை : 102

மேலே