ஆசை

இனிதென ஓர் நாள்
முரணென ஓர் நாள்
கனவென ஓர் நாள்
நினைவென ஓர் நாள்
தினம் எழுந்து ஓடி ஓடி ஓய்ந்து போய்
உணவின் நேரம் மறந்து
ஓடுவதின் மர்மம் என்ன?
ஆதி காலத்தில் உணவுக்காக ஓடினான்.
அடுத்த காலத்தில் உடைக்காக ஓடினான்.
வீடு, நிலம், தாய், தந்தை, மனைவி மக்கள் என்றான்.
இன்றோ ஓடுவதின் இலக்கணம் மாற்றி எழுதபட்டுவிட்டது.
ஆடம்பரமும், கட்டவிழ்த்து விடப்பட்ட ஆசைகளுக்காக ஓடுகிறோம்.
தேவை மறந்து பிறர் பார்க்க வாழ ஆசை கொள்கிறோம்.
வீட்டில் நடந்த, திருமணம் கண்ட இறுதி தலைமுறை நாமே.
மண்டபத்தில் லட்சம் செலவழிக்கும் காலம் இது.
இதனின் அர்த்தம் பிரமாண்டம் மட்டுமே.
ஆனால் அதனின் அவசியம் யார் அறிவார்?
அடிப்படையில் கவனம் செலுத்தி,
உணவின் நேரம் தவறாது,
ஆன்மா தங்கும் உடலை காப்போம்.

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:18 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : aasai
பார்வை : 54

மேலே