தங்கை
குழந்தை பருவத்தில் கிடைத்த
பொம்மை நீ.
அடிப்பதும், கிள்ளுவதும், கிண்டலடிப்பதுமாய் கழித்தேன் நான்.
உணரும் காலமும் வந்தது.
அவள் பொம்மையன்று
தாயின் மறுவுறுவானவள் என்று.
எங்கும், எதிலும்
விட்டு கொடுக்காத
விட்டு விலகாத
சினமே கொண்டாலும்
தேடி வந்துவிட்டால்
நீ காட்டும் பரிவு
நான் வீழமாட்டேன் என உரைக்கிறது.
சிறிது பிரிந்து பின் ,
முகம் காணும் போது
அந்த கதிரவனும் தோற்று போவான்
அவள் முகபிரகாசம் கண்டு.
சண்டகாரியும் நீ தான்.
சங்கமிக்கும் அன்பும் நீ தான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
