அத்தை மகள்

அத்தை மகளே, ஆசை கனவே
நித்தம் உனை நினைத்தே
சித்தம் கலங்குதடி
கடந்த காலம் நானறிவேன்
நிகழ்காலம் நீயே அறிவாய்.
எப்படி என்கிறாயா?
ஈருடல் ஓருயிர்
எனும் முதிர்மொழி நிசமெனில்
எனதின் எதிர்காலம் உன்னில் தொடங்குமே
உடை களைந்து, உடல் கலந்து
உணர்வுகள் கூடும் போது
உன்னை என்னிடம் கொடுப்பாய்.
யார் யார் குரலோ கேட்டு
எங்கெங்கோ சென்ற என் செவிகள்
உன்னிடம் தஞ்சம் சேரும்
நீ ஆமாம் என்றால் ஆமாம்
இல்லை என்றால் இல்லை
நவீனத்தின் நரகத்தில்
சோர்ந்து விடாமல்
குடும்பமாய் கூடி
யானை பலம் ஏந்துவோம்
மாமன் என நீ மொழியும் சொல்லில்
உயிர் ஆசை கூடுமே.
என்னில் நீ சேரும் நேரம்
வானில் பல வண்ணம் சேரும்.
சண்டையிட்டு சண்டையிட்டு
சோர்ந்து போய்
காதல் மேல் காதல் செய்வோம்
உலகின் காதலை நானறியேன்
உனதருகில் அறிவேன்
பூலோகத்தின் துடிப்பெனும் காதலை.

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:50 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : atthai magal
பார்வை : 244

மேலே