இறுதி மரியாதை
முடிச்சுகள் அவிழும் நேரம்.
உறவின் பிணைப்புகள் இறுகவும்,
அற்று கொண்டு போகவும் காண்கிறேன்.
அடுத்து என ஒன்று இல்லையென்றால்,
வாழ்வு வெறுமை கொள்ளுமென
மனம் தெளிகிறது.
சிலர் இலட்சியத்தை உலகமென கொண்டு,
அதனுள்ளே வாழ்வை முடித்து,
தனக்கென வரலாற்றை சொந்தமாக்கி கொள்கிறார்கள்.
அன்பையும், சிறு. கூடல்களையுமே கிராமத்து மனங்கள் ஏங்குகிறது.
வாடின முகம் கண்டு என்ன ஆனதென
கேட்கும் வார்த்தையே அவர்களுக்கு மருந்து.
சிறு துரும்புபட்டாலும் துடித்து போகும்
தெய்வங்களுக்கு மனிதனாய் மரியாதை செய்.
பணம், பொருளை மீறி இறுதி மூச்சில் அதுவே நிறைந்திருக்கும்.