தடங்கல்கள்
நீயும், நானும்
யோசிப்பது ஒன்றே.
நல்லதே நடக்கும்.
சிறு கல் மோதினால்
பாறைகள் உடைந்திடுமா?
நாம் பாறை.
சிறு சத்தம் சிதைக்க
அனுமதிக்காதே
பெரும் புதையல்
நம்மிடையே உண்டு.
அது அன்பு.
அம்மா, அப்பா கொடுத்த
அதே அன்பு.
மணி நேரம் அதை மாற்றிடுமா?
என்றென்றும் நானாக நான்
நீயாக நீ…