கடவுட் காட்சிகளைக் கண்டனவே கண்களாம் – அறநெறிச்சாரம் 200

நேரிசை வெண்பா

பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல! - மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண் 200

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து அழகிய நீலமணி போல எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா;

காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.

குறிப்பு:

பொரு - ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம்.

''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-22, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே