ரசித்திட வேண்டும்

நுனி மூக்கை விடைத்து
பெரிதாய் நீ கொட்டாவி
விடும்போது திறந்த வாயில்
என் உலகம்தன்னை கண்டேனடி..
உன் பிஞ்சு வெண்டை விரல்கள்
தென்றலாய் கைபேசியை
தடவுதல் கண்டு
கைபேசியாய் மாறிடத் துடித்தேனடி...
நுனி நாக்கை நீட்டி
நீ பரிகாசம் செய்கையில்
பனி மலையில் சறுக்கியது போல்
சரிந்து விட்டேனடி...
அத்தனையும் சரிதான்
இப்படி எத்தனை நாளைக்குத்தான்
விளையாடப் போகிறாய்? - இல்லை
விளையாட்டு காட்டப் போகிறாய்?
என்னால் முடியவில்லையடி...
என்னை மரணம் வந்து
தழுவும்வரை உன்னை நான்
முழுதாய் ...எனதாய்..
நான் மட்டுமே
ரசித்திட வேண்டும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Nov-22, 8:31 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : rasithida vENtum
பார்வை : 244

மேலே