கலிவிருத்தம் எழுதுவது எப்படி - புதிதாக முயசிப்போர்க்கு வழிகாட்டல்

கலிவிருத்தம் எழுதுவது எப்படி?

விருத்த மேடை 66
கலிவிருத்தம் 2
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வந்தனம் செய்திடில் வாழ்வுஞ் சீருறும்;
நிந்தனை பேசிடில் நேரும் துன்பமே!
இந்தியன் என்றசொல் ஏற்றம் நல்குமே;
சுந்தரத் தமிழினில் சொர்க்கம் காண்பமே! 1 - வ.க.கன்னியப்பன்

குறிப்பு:

எந்தவிதமான சீரொழுங்கும் இல்லாத, எந்தவிதமான இலக்கண வாய்பாட்டிலும் இல்லாத வேறு வேறு அள்வுள்ள சீர்களை வைத்து ’அவலோகிதம்’ சொல்கிறதென்று கலிவிருத்தம் என்றும், கலித்துறை என்றும், அறுசீர் விருத்தம் என்றும் சொல்லாதீர்கள். கூகுளில் தேடிப் படித்துப் புரிந்து பாக்கள் எழுதுங்கள்.

நான்கடிகளிலும் முதல்சீரை மட்டும் பாருங்கள்.

பாண்டிய - கூவிளம்
ஆண்டின் - தேமா
காண்டீப - தேமாங்காய்
மாண்டுவிடும் - கூவிளங்காய்

நம் அனுபவத்தை வைத்து தேவையான அளவு அவலோகிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எழுத வேண்டாம் என்றுதான் எண்ணினேன்; மனமும் தயங்கியது. இருந்தாலும் 10 ஆண்டுகளாக நட்பிலிருக்கிறோம் என்ற நல்லெண்ணத்தில் எழுதத் தோன்றியது.

வெவ்வேறு இலக்கண வழிகாட்டல்படி, நான் பத்துக்கும் மேற்பட்ட வகைகளில் தகுந்த ஆசான்கள் வழிகாட்டலில் (பாவலர் பயிலரங்கம், பைந்தமிழ்ச் சோலை முகநூல் வழி) குறித்துள்ள வாய்பாட்டின்படி, 1, 3 சீர்களில் தக்க மோனையமைத்து எழுதிப் பழகுங்கள்; பதியுங்கள்; பாடல்கள் சிறக்கும்.

நான் எழுதுவது பாவினம், உங்களுக்குப் புரியாது என்று சொன்னால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

தயவு செய்து சிந்தியுங்கள். தவறாக இருந்தால் என்னை மன்னியுங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-22, 4:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே